Advertisement

இந்திய உடைகளுக்கு ஏற்ற காலணி பாணிகள்

By: Karunakaran Fri, 18 Sept 2020 5:44:15 PM

இந்திய உடைகளுக்கு ஏற்ற காலணி பாணிகள்

காலணிகளின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்றே. திருமணங்கள், கலாச்சார விழாக்கள் மற்றும் பிரமாண்டமான பண்டிகை விழாக் களுக்கு சிறந்த பாதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவது ஒரு கடினமான பணியாக உள்ளது. ஜூத்திஸ் அல்லது மொர்ஜாரிஸ் : ஜூத்திஸ் என்பது ஹுல் இல்லாத தட்டையான இந்திய ஷூவாகும். இவை பெரும்பாலும் கேஷுவல் அல்லது செமி ஃபார்மல் ஆடைகளுக்கு ஏற்றவை. ஜூத்திகளின் பிறப்பிடம் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களாக இருந்தாலும் இன்று அனைத்து மாநிலங்களிலும் அற்புதமான வடிவமைப்பு களுடன் கிடைக்கின்றன.

பெலரினாஸ் மற்றும் சாண்டல்ஸ் : பெலரினால் ஜூத்திகளை ஒத்திருந்தாலும் மிகவும் சமகால தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. சாண்டல் எண்ணற்ற ஸ்டைகளில் பெரும்பாலான இந்திய ஆடைகளான சேலைகள், ஸ்ட்ரெய்ட் கட் சூட்ஸ், லெஹங்கா, லாங் ஸ்கர்ட்ஸ் மற்றும் லெஹங்கா சூட்டுகளுடன் அணிந்து கொள்ளும் விதமாக விற்பனையில் உச்சம் தொடுகின்றன.

shoe styles,wedding,indian wear,party ,ஷூ ஸ்டைல்கள், திருமண, இந்திய உடைகள், விருந்து

வெட்டிங் ஹீல்ஸ் : திருமண வரவேற்பு, திருமண பார்ட்டி மற்றும் நவீனத் திருமண ஆடைகளுடன் இதுபோன்ற ஹீல்ஸ்களை அணியும் பொழுது அவை அணிபவருக்கு ஆளுமையையும், பிரமாண்டத்தையும் தருவதாக இருக்கும். திருமண வைபவங்களுக்கு அணியும் காலணிகள் என்பதால் அவற்றில் கிறிஸ்டல்கள் பதித்துப் பளபளப்பானதாக இருக்கும். ஆடைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஹீல்ஸ்களை வடிவமைப்பதற்கென்றே காலணி வடிவமைப்பாளர்கள் உள்ளனர்.

இந்திய செப்பல், ஃபிலிப் ஃப்ளாஸ் மற்றும் சாண்டல் செப்பல்ஸ் : பெருவிரலுக்கும், மெட்டி விரலுக்கும் இடையே தண்டு போன்ற பாகத்தின் மேல் பூ வேலைப்பாடு, பாதத்தின் மேற்புறம் பட்டையான வேலைப்பாட்டுடன் கூடிய வார் இவை பார்ப்பதற்கு பழைய கால பாத ரட்சை போன்ற தோற்றத்தை ஞாபகப்படுத்துகின்றது. அதே சமயம் ஸ்டைலான தோற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. தட்டையான செப்பல்கள் நவநாகரீகமாகவும் அதே சமயம் வசதியாகவும் உள்ளன. தட்டையான செப்பல்களை விரும்பாதவர்களாக இருந்தால் ப்ளாட் ஃபார்ம் அல்லது கிட்டன் ஹீல்ஸ் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம். ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை அருகிலிருக்கும் கடைகள் மற்றும் அக்கம் பக்கம் சென்று வர அணியலாம்.


Tags :