Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் ஃபார்மல் ஷூக்களை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்!

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் ஃபார்மல் ஷூக்களை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்!

By: Monisha Tue, 22 Sept 2020 6:11:12 PM

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் ஃபார்மல் ஷூக்களை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்!

ஆடையலங்காரத்தில் முக்கியமான ஒரு பகுதியாக காலணிகள் இருக்கின்றன. காலணிகள் உங்களுடைய பாதங்களை குப்பைகளிலிருந்து காப்பாற்றியும், மோசமான தரைப்பகுதிகளில் பாதுகாத்தும் வந்தாலும் உங்களுடைய ஸ்டைலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க முடிவதில்லை.

இந்த வர்த்தகமயமான உலகத்தில், நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவோ அல்லது பணி நிமித்தமாகவோ அல்லது கருப்பு டை அணிந்து டின்னருக்கு செல்வதாகவோ என எதுவாக இருந்தாலும் காலணிகள் அவசியம். நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு போகிறீர்கள் மற்றும் எந்த உடையை அணிகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், அந்நிகழ்வில் மற்றவர்கள் அணிவதைப் போலவும் ஷூக்கள் இருக்க வேண்டும்.இதோ நீங்கள் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் ஃபார்மல் ஷூக்களை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்.

shoes,formal shoes,fashion,beauty,style ,காலணிகள்,ஃபார்மல் ஷூ,பேஷன்,அழகு,ஸ்டைல்

வியாபார நிகழ்வுகள்
இது போன்ற நிகழ்வுகளில் சூட்-உடன் சேர்த்து தோலால் செய்யப்பட்ட ஷூக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றின் முன்-மேல் பகுதி உங்களுடைய பாதத்தை சூழ்ந்திருக்குமாறும் மற்றும் தனித்திருப்பதாகவும் இருக்க வேண்டும். லேஸ்களை கொண்டிருக்கும் ஷூக்கள் பொதுவாகவே வியாபார நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதாகவும், மிகவும் ஃபார்மல் வகை என்று கருதுவதாகவும் உள்ளன.

ஃபார்மல் லெதர் ஷூ
இரவு விருந்துகளுக்கு ஏற்ற டக்ஸீடோ ஆடைகளை அணியும் போது உங்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான சாய்ஸ்களே காலணியை தேர்ந்தெடுப்பதில் கிடைக்கும். ஃபார்மல் ஷூக்கள் பளபளப்பாக தோற்றமளிக்கும், ஆனால் நீங்கள் பேடன்ட் லெதரை வசதியற்றதாக நினைத்தால் மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கும் திறன் கொண்ட கருப்பு மேட் தோல் ஷூக்களை பயன்படுத்தலாம்.

shoes,formal shoes,fashion,beauty,style ,காலணிகள்,ஃபார்மல் ஷூ,பேஷன்,அழகு,ஸ்டைல்

பிஸினஸ் கேஷூவல் ஷூக்கள்
பிஸினஸ் கேஷூவல் ஷூக்கள் என்பது மிகவும் சிக்கலான சூழல்களை மையமாக கொண்டவையாகும். அலுவலகத்தில் செல்லும் இன்ப சுற்றுலாவாகவோ அல்லது ஒரு ஞாயிற்றுக் கிழமை விருந்தாகவோ இருக்கும் வேளைகளில் நீங்கள் பாதி ஃபார்மலில் இருக்க வேண்டும். கேஷூவல் உடைகளிலும் மிடுக்கான தோற்றததை பெற விரும்பினால், தோலால் செய்யப்பட்ட போட் ஷூக்களை தேர்ந்தெடுங்கள்.
லோஃபர் வகை காலணிகள் இந்த உடைகளுக்கு மிகவும் ஏற்றவையாகும்.

லோபர்ஸ் காலணிகள்
ஊர் சுற்றிக் கொண்டே இருக்கும் வியாபார அலுவலர்களுக்கு மிகவும் ஏற்றவை லோபர் வகை காலணிகளாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளின் போது எளிதில் கழட்டவும், மாற்றவும் ஏற்றவையாகவும், வசதியாகவும் மற்றும் பல்வேறு வகை பயன்பாடுகளுக்கும் இந்த காலணிகள் உதவுகின்றன. மென்மையான மற்றும் எளிமையான வடிவமைப்புகளே மிகவும் ஃபார்மலாக இருக்கும். மேலும் டை அணியாமல் சூட்களை போடும் போதும் லோபர்கள் நலல தோற்றத்தைக் கொடுக்கின்றன.

Tags :
|
|