Advertisement

பெண்களுக்கான சில பயனுள்ள பேஷன் குறிப்புகள்!!

By: Monisha Thu, 17 Sept 2020 4:51:14 PM

பெண்களுக்கான சில பயனுள்ள பேஷன் குறிப்புகள்!!

பேஷன் உலகில் பல உடைகள் மற்றும் அலங்காரங்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று நாம் சில பயனுள்ள பேஷன் குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

கலர் கண்ணாடிகள்
பேஷன் உலகில் தற்போது கலர் கண்ணாடிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கலர் கண்ணாடிகளை பல ஆடைகளுடன் பொருந்தும்படி அணியலாம். நட்சத்திரங்கள் பலர் இப்போது இதுபோன்று கண்ணாடிகளை அணிந்து வருகின்றனர். இவை ஸ்டைலிற்காக மட்டும் அணிவதோடு அல்ல. இதில் பல நன்மைகளும் இருக்கின்றன. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்!

மஞ்சள் கண்ணாடிகள் உங்களை அலர்ட்டாக வைக்குமாம். அஜீரனக் கோளாரையும் தீர்க்குமாம். ரோஸ் கண்ணாடிகள் உங்களை உற்சாகப் படுத்த உதவுமாம், மன அமைதியையையும் கொடுக்கும் என்கிறார்கள். நீல கண்ணாடி உங்களின் கலையுணர்வை அதிகரித்து ஆவலுடன் வேலை செய்ய உதவுமாம். பச்சை கண்ணாடிகள் மன அமைதி மற்றும் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்தும், வையலெட் கண்ணாடிகள் சஹஸ்ரநாமம் சக்கரத்தை தூண்டவைத்து உங்கள் வாழ்வை மேன்மைப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

fashion,color glasses,wedding show,chiffon,trending,women ,பேஷன்,கலர் கண்ணாடிகள்,திருமண நிகழ்ச்சி,சிஃபான்,ட்ரெண்டிங்,பெண்கள்

கரிகாரி பற்றி தெரியுமா?
கரிகாரி என்றால் கையால் நெய்த ஆடைகள் என்பது பொருள். இந்த வகை ஆடைகள் பிரபலமடைவதோடு, மக்களின் விருப்பத்தையும் அதிக அளவில் ஈர்த்துள்ளது. மென்மையான வண்ணங்களின் மையத்தைக் கொண்டு நெய்த ஆடைகள் இவை. உடலுக்கு மட்டும் குளிச்சியைத் தராமல், இந்த வண்ணங்கள் மனதிற்கும் குளிச்சியைத் தருகிறது. இந்த ஆடைகள் பல நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றது. கோடைகாலத்திற்கு ஏற்ற மிருதுவான ஃபேஷன் இது. இதன் வேளைபாடுகள் அனைத்தும் கையால் செய்ததால், சருமத்தில் உறுத்தல் ஏதும் ஏற்படாது.

fashion,color glasses,wedding show,chiffon,trending,women ,பேஷன்,கலர் கண்ணாடிகள்,திருமண நிகழ்ச்சி,சிஃபான்,ட்ரெண்டிங்,பெண்கள்

வெய்யில் நேரங்களில் திருமண நிகழ்ச்சிக்கு இதை அணியலாம்!
வெய்யில் காலத்தில் நடக்கும் திருமணங்களில் நாம் எடையுள்ள பட்டு சேலைகளை அணிந்து செல்ல கடினமாக இருக்கும். இதற்காகவே சிஃபான் ஃபேப்ரிக் கலந்த ஆடைகளை பரிந்துரைக்கின்றோம். இது லைட்டாகவும் எளிதாகவும் இருக்கும். எனவே இத்தகைய ஆடைகளை அணிந்து வெய்யில் நேரங்களை குளிர்ச்சியாக கொண்டாடுங்கள்!

Tags :