Advertisement

குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் முக்கியமானது

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:33:22 PM

குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் முக்கியமானது

சென்னை: உங்கள் குழந்தைகளை நேசிப்பதை அடிக்கடி அவர்களிடம் கூற வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளுடன் விளையாடுங்க. பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், குழந்தைகள் விளையாட ஏங்கிப் போய் இருப்பார்கள்.


இதனால் பெற்றோர்கள் மீது கோபம் அதிகரிக்கும். சில நேரங்களில் தனிமையிலேயே இருந்து விடலாம் என மனது இறுகிவிடும். சிறுவயதிலிருந்து விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


சாப்பிடும், தூங்கும் நேரத்தை தீர்மானித்தல் அவசியம். தூங்கும் போது குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பள்ளியில் நடந்ததை பற்றி கேட்பது போன்ற செயல்கள், வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தாலும் கூட அவர்களுக்கு குழந்தைகளுடன் பேசும்போது உறவை வலுப்படுத்தும்.

children,time,spend,need,improve,nurture ,குழந்தைகள், நேரம், செலவிடுதல், அவசியம், மேம்படுத்த வேண்டும், வளர்ப்பு

தேவைப்படும்போது கண்டிப்பாக உங்களின் கவனம் கிடைத்தல் அவசியம். ஏதாவது கேட்டால் அது குறித்து பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்.


அதில் குழந்தைகளை நிறைவு செய்வதாகவும் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் மனநலம் நன்றாக இருக்கும். எப்போதும் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தக் கூடாது. குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்கும் பெற்றோர் ஆகவும், குழந்தைகள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கவும் வேண்டும்.

குழந்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போன்று, குழந்தைக்கு நீங்களும் உண்மையாக இருக்க வேண்டும். தாய் குழந்தை உறவானது வயிற்றில் உருவாகும் போதே தொடங்கி விடுகின்றன. தந்தையை பொருத்தவரை ஆரம்பத்திலிருந்தே குழந்தை உடனான உறவை மேம்படுத்த வேண்டும். குழந்தை பிறந்ததிலிருந்து அவர்களுடன் நேரம் செலவிடுவது அவசியம்.

Tags :
|
|
|