Advertisement

தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்

By: vaithegi Thu, 05 Jan 2023 7:24:13 PM

தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்

தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்களை கூட இந்த நகைகள் ஈர்த்துவிடும். அதனால்தான் அதன் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் மக்களுக்கும் அதன் மீதான் காதல் தீருவதில்லை. அப்படி நீங்களும் தங்க நகை பிரியர் எனில் நிச்சயம் வீட்டில் விலைமதிப்பற்ற தங்க நகைகளை சேமித்து வைத்திருப்பீர்கள். பெரும்பாலும் அவற்றை முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே அணிந்துகொண்டு செல்வீர்கள்.

இதனால் எப்போதும் பூட்டியே இருக்கும் தங்க நகைகள் கூட நிறம் மாறக்கூடும். அடிக்கடி அணியாவிட்டாலும் ஏன் இப்படி நிறம் மாறுகிறது என்று சந்தேகம் இருக்கலாம். அதற்கு பராமரிப்பின்மையும் காரணமாக இருக்கலாம். எனவே தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பளபளப்பாக பராமரிக்க இந்த டிப்ஸு டிரை பண்ணி பாருங்க.

tips,gold jewelry ,டிப்ஸ் ,தங்க நகைகள்


நகைகளை சுத்தம் செய்வது அவசியம் : வெளியே சென்று வந்த பின் நகைகளை கழற்றி வைக்கும்போது வியர்வை, தூசி, எண்ணெய் பிசுக்குடன் அப்படியே பாக்ஸில் போட்டு மூடி வைப்பது தவறு. அதை கழற்றியதும் மைல்ட் ஷாம்பூ கலந்த வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவி எடுக்க வேண்டும். பின் அதன் ஈரம் நன்கு காய்ந்ததும் பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் நகைகள் எப்போதும் புதிது போல் மின்னும்.

குளிக்கும் முன் கழற்றி வைக்கவும் : சிலர் கழுத்து நிறைய நகைகளை அணிந்தபடி குளிக்க செல்வார்கள். இப்படி செய்வதும் நகைகளை சேதப்படுத்தும். அதோடு நீங்கள் பயன்படுத்தும் சோப் அல்லது பாடி வாஷ் கெமிக்கல் நகையை பாதிக்கலாம். எனவே ஹெவியான காதணி, கழுத்தணிகளை கழற்றி வைத்த பின் குளிக்க செல்வது நல்லது.

கரடுமுரடாக கிளீன் செய்ய கூடாது : நகைகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட், டிஷ் வாஷ் சோப் என பயன்படுத்துவது மிகவும் தவறான செயல். அதோடு அதன் அழுக்குகளை எடுக்க கரடு முரடான பிரஷ் கொண்டு பயன்படுத்துவதும் தவறு. இது கீரலை உண்டாக்கி நகையை சேதப்படுத்தும். கற்கள் பதித்த நகைகள் எனில் அவை சீக்கிரமே சேதமடையும். எனவே நகைகளை சுத்தம் செய்ய கண்டிப்பாக இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.உடற்பயிற்சியின் போது நகைகளை தவிர்க்கவும் : உடற்பயிற்சியின்போது வியர்வை அதிகமாக வரும். வியர்வை காரணமாக நகை பாழாகலாம். எனவே உடற்பயிற்சியின்போது நகைகளை அணியாதீர்கள்.

வெளியே செல்லும்போது வாசனை திரவியங்களை பயன்படுத்துவது பலருடைய பழக்கம். அப்படி ஸ்பிரே செய்யும்போது நகைகள் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவை நகை மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். வாசனை திரவியங்கள் மட்டுமன்றி பாடி லோஷன், கிரீம்கள் தடவுவதும் நகைகள் மீது பட்டால் பாதிப்புதான். எனவே வாசனை திரவியத்தை அடித்துகொண்ட பின் நகைகளை அணியுங்கள். பாலிஷ் போடுங்கள் : 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை நகைகளுக்கு பாலிஷ் போட்டு வையுங்கள். இதனால் நகைகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் புதிதுபோல் மின்னும்.

Tags :
|