Advertisement

பெண்களுக்கு அழகிய தோற்றம் தரும் சுடிதார் வகைகளை தெரிந்து கொள்வோம்!

By: Monisha Wed, 26 Aug 2020 4:50:03 PM

பெண்களுக்கு அழகிய தோற்றம் தரும் சுடிதார் வகைகளை தெரிந்து கொள்வோம்!

பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆடையில் சுடிதார் உடையும் ஒன்று. சுடிதாரில் எத்தனையோ விதமான வகைகள் உள்ளன. இன்று நாம் சில வகை சுடிதார்களை பார்ப்போம்.

சிம்பிள் காட்டன் சுடிதார்ஸ்
தினந்தோறும் அணிவதற்கு ஏற்றவை என்று காட்டன் சுடிதார்களைச் சொல்லலாம். இது போன்ற சுடிதார்களை பெண்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அவை மிகவும் டீசண்ட் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை தருகிறது. சுடிதார் பேன்ட்டுடன் ஸ்லிம்ஃபிட் டாப்பை அணியும் பொழுது அணிபவரை ஒல்லியாகவும், அழகாகவும் காட்டுகின்றது. எனவே, அலுவலகம் குடும்ப விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு இது போன்றே காட்டன் சுடிதார்களை பெண்கள் அணிகிறார்கள்.

காட்டன் சில்க் சுடிதார்
காட்டன் சில்க் துணியானது மிகவும் ரிச்சான தோற்றத்தை தருகின்றது. இதுபோன்ற சில்க் காட்டனில் உடல்வாகிற்கு ஏற்றாற் போல் தைத்து அணியப்படும் சுடிதார்கள் பளபளப்பாகவும், ஆடம்பரமாகவும் கல்யாணம், வரவேற்பு போன்ற விசேஷங்களுக்கு அணிந்து செல்லக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாகவும் இருக்கின்றன.

chudidhar,women,beauty,cotton,designer,fashion ,சுடிதார்,பெண்கள்,அழகு,காட்டன்,டிசைனர்,பேஷன்

டிசைனர் காட்டன் சுடிதார்
டிசைனர் சுடிதார்கள் மேல் டாப்பானது பெரும்பாலும் மிக அழகிய வேலைபாட்டுடனும் கீழ் பேன்டானது பிளெயின் துணியாகவும் இருக்கும். பெரும்பாலும் மேல் டாப்பில் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடு, மிரர் வொர்க் வேலைப்பாடு அல்லது அழகிய கற்கள் மணிகளைக் கொண்டு தைத்தும் மிக அழகான டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற சுடிதார் மற்றும் டிசைனர் செட் என்றால் முழுக்கை வைப்பதே மிகவும் சூட்டாகும்.

ஹைகலார் டிசைனர் ஃபுல் ஸ்லீவ் சுடிதார்
ஹைகாலரில் ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு முழுக்கையின் மேற்புறம் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டு வரை ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு வரும் துணிகளே மிகவும் ட்ரெண்டியாக உள்ளன எனலாம். இவற்றை நம் உடல்வாகிற்கு ஏற்றார்போல் மிகவும் ஃபிட்டாக தைத்து அத்துடன் ஹைஹீல்ஸ் செப்பலை அணிந்தால் உங்களது தோற்றம் அனைவரையும் பார்க்க தூண்டும்.

ஸ்ரெயிட்கட் டிசைனர் சுடிதார்
உயரம் குறைந்தவர்கள் இது போன்ற சுடிதார்களையே பெரிதும் விரும்புவார்கள். நீண்ட குர்த்தி முன்புறம் கழுத்திலிருந்து குர்த்தியின் அடி வரை ஒரு சாண் அளவிற்று அழகிய டிசைன், பக்கவாட்டில் ஸ்லிட். சற்று யோசித்துப் பாருங்கள் இது போன்ற மிகவும் ஹெவியான டிசைன் செய்யப்பட்ட சுடிதார்களை எந்தப் பெண்ணும் விரும்பாமல் இருக்க முடியாது.

chudidhar,women,beauty,cotton,designer,fashion ,சுடிதார்,பெண்கள்,அழகு,காட்டன்,டிசைனர்,பேஷன்

கான்ட்ராஸ்டிங் கலர் சுடிதார் சூட்
டாப், பாட்டம் மற்றும் ஷால் என எல்லாமே வெவ்வேறு நிறம் மற்றும் டிசைனில் வருகிறது. மாறுபட்ட விருப்பமுடையவர்கள் இதனை விரும்பி அணிகிறார்கள்.

ஷார்ட் சுடிதார்
இந்தியாவில் பஞ்சாப் மாநிலப் பெண்களின் பிரத்தியேக மாடல் என்று இதைச் சொல்லலாம். டாப்பானது முட்டிக் கால்களுக்கு மேல் இருப்பது போன்று தைக்கப்படும். கழுத்தை சுற்றியும், வயிறுவரை நீண்டும் டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதே போல் டாப்பின் கீழ்புறம் பட்டையாக டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற துணிகளில் ஷார்ட் டாப் சுடிதார் தைக்கப்படும் பொழுது அவை பார்ப்பதற்கும், அணிவதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இவை மட்டுமல்லாமல் எளிமையாக ஆனால் நேர்த்தியாக இருக்கும் சுடிதார்கள், ப்ரோக்கேட் சுடிதார்கள், சில்க் டிசைனர் சுடிதார்கள், நெட்டட் சுடிதார்கள், பனாரஸ் சுடிதார்கள், முட்டி வரை இருக்கும் அனார்கலி, மாடல் சுடிதார்கள், ஃப்ராக் டைப் சுடிதார்கள், அம்பர்லா கட் சுடிதார்கள், பார்ட்டி வேர் சுடிதார்கள், மொகல் டைப் சுடிதார்கள், கைகளாலேயே நெய்யப்பட்ட சுடிதார் துணிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற சுடிதார்களை ரெடிமேடாக வாங்குவதோடு துணிகளை எடுத்து அவற்றை நம் ரசனைக்கேற்ப தைத்து அணிந்து கொண்டால் மிகவும் அழகாக வலம் வரலாம்.

Tags :
|
|
|