Advertisement

Whats App-ல் தற்போது வந்துள்ள அப்டேட்

By: vaithegi Thu, 14 Sept 2023 1:39:37 PM

Whats App-ல் தற்போது வந்துள்ள அப்டேட்

இந்தியா: உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி அண்மைக்காலமாக புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு இந்த வசதி பொருந்தும்.

தற்போது 1 மொபைல் போனில் 2 வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தக்கூடிய அம்சம் வந்துள்ளது. தொழில் துறையினருக்கு இந்த புதிய அப்டேட் மிகவும் பயன் உள்ளதாக இருந்து கொண்டு வருகிறது.

update whatsapp app ,அப்டேட் ,வாட்ஸ்அப் செயலி

பயனர்களுக்கு வாட்ஸ்அப் செட்டிங்கில் QR கோடுக்கு கீழே உள்ள ஆர்கானிக் கிளிக் செய்து மற்றொரு வாட்ஸ்அப் அக்கவுண்டை திறக்கலாம். அதன் தொடர்ச்சியாக தற்போது சேனல் பற்றிய புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் பயனாளி ஒரு நிறுவனம் அல்லது ஒரு தனி நபரை பின் தொடர்ந்து அவர்கள் பகிரும் தகவல் மற்றும் செய்திகளை அறியலாம். பின் தொடரும் நபருக்கு தொலைபேசி எண், புகைப்படம் உள்ளிட்ட சுய விவரங்கள் எதுவும் காட்டாது.

Tags :