Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • வாட்ஸ் அப் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்ட நிலையில் தற்போது புது அப்டேட்

வாட்ஸ் அப் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்ட நிலையில் தற்போது புது அப்டேட்

By: vaithegi Fri, 28 July 2023 3:06:52 PM

வாட்ஸ் அப் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்ட நிலையில் தற்போது புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் வீடியோ எடுத்து தனது குரலிலேயே பயனர்களுக்கு சர்ப்ரைஸாக தனிப்பட்ட வீடியோவாக அனுப்பும்படியான அப்டேட் வெளியிட்டு ... வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. அதாவது, பயனர்களுக்கு இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்படுவதால் பில்லியன் கணக்கான பயனர்கள் whatsapp செயலியை தொழில் மற்றும் வணிகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பயனர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக புது அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, whatsapp செயலிலேயே 60 நொடிகளுக்கு தனிப்பட்ட வீடியோக்களை பகிரும் படியான அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.

whatsapp update ,வாட்ஸ் அப் ,அப்டேட்

அதாவது, பயனர்களுக்கு ஏதேனும் பிறந்தநாள் வாழ்த்து, நல்ல செய்தி மற்றும் ஜோக் உள்ளிட்ட வீடியோக்களை பதிவு செய்து தனது சொந்த குரலிலேயே வாய்ஸ் மெசேஜ் மூலமாக ஒரு வீடியோவினை உருவாக்கி அனுப்பலாம்.

மேலும், whatsapp செயலியில் உள்ள Switch To Video Mode ஐ ஆன் செய்து எளிதாக வீடியோவினை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வாட்ஸ்அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில வாரத்தில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :