Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் அனைத்து 10-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து 10-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

By: Monisha Tue, 09 June 2020 4:24:47 PM

புதுச்சேரியில் அனைத்து 10-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுளள்ளதையடுத்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி கூறினார்.

கொரோனா அச்சம் காரணமாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் மன அழுத்தத்தில் இருந்தனர். கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஜூன் 15-ல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இச்சூழலில் மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்தார்.

puducherry,10th class,students,all pass,cm narayanasamy ,புதுச்சேரி,10-ம் வகுப்பு தேர்வு,மாணவர்கள்,தேர்ச்சி,முதல்வர் நாராயணசாமி

இதையடுத்து புதுச்சேரி அரசின் முடிவு குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:- தமிழகத்தின் பாடத்திட்டத்தை புதுச்சேரி கல்வித் துறை பின்பற்றுகிறது. இங்கு தனிக்கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரியில் மொத்தம் 16,709 பேர் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை அரசு ரத்து செய்ததால் அதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றனர்.

அதேபோல் 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து புதுச்சேரி அரசு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :