தேங்காய் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல
By: vaithegi Wed, 29 Nov 2023 3:30:55 PM
பொதுவாக தேங்காயை போலவே தேங்காய் தண்ணீரும் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். ரிபோஃப்ளேவின், ஃபைடோஜெனிக் அமிலம், தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
1. சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
2.தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
3. செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.
4.ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
5. தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.
6.மேலும் தேங்காய் தண்ணீர் குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
7.சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும் இப்படி இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
8.தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.