Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முள்ளங்கி மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

முள்ளங்கி மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

By: vaithegi Thu, 30 Nov 2023 09:55:58 AM

முள்ளங்கி மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

பொதுவாக முள்ளங்கி, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான காய்கறியாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன.

முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது.

காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாக வெள்ளை முள்ளங்கி விளங்குகிறது. முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும். மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை சரி செய்யும்.

radish,benefits ,முள்ளங்கி ,பயன்கள்


1.முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன.

2.முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

3.முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

4.நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முள்ளங்கியுடன், முள்ளங்கி இலைகளையும் உட்கொள்ள, மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5.தலை முடியை வலுவானதாக மாற்ற முள்ளங்கி சாப்பிட வேண்டும். முள்ளங்கி சாறு முடி உதிர்தலைக் குறைக்க பயனுள்ளதாக அமைகிறது.

6.முள்ளங்கி சாற்றைக் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த, செயல்முறையை வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் கூந்தலின் வேர்களை பலப்படுத்த இயலும்.

7.முள்ளங்கியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் காரணமாக, மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்க முள்ளங்கி பயனுள்ளதாக அமைகிறது.

Tags :
|