Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கத்தாழை மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா

கத்தாழை மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா

By: vaithegi Wed, 29 Nov 2023 10:32:23 AM

கத்தாழை மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா

பொதுவாக கற்றாழை நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடியது .உதாரணமாக கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது. மேலும் அனைத்து தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கற்றாழையை பயன்படுத்தலாம். பொலிவான சருமத்தை பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் கற்றாழையை உபயோகிக்கலாம்.

“கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல் சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமை தருது.”

“இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இருக்குறதால, இந்த கற்றாழைய “கன்னி, குமரி...” அப்படின்னும் சொல்லுவாங்க. கற்றாழைச் சாறு இல்லாட்டி கற்றாழை பொடிய முறையா சாப்பிட்டு வந்தா சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் பெண்களுக்கு குணமாகும் வாய்ப்புண்டு.”

benefits,acacia ,நன்மைகள் ,கத்தாழை

1.தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும்.

2. கத்தாழை மூலம் வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

3.கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

4.கற்றாழை இருக்கும் சத்துக்கள் உடலில் நைட்ரிக் ஆக்சைட், சைட்டோகைனின் போன்ற வேதிப்பொருட்களின் உற்பத்தியை நமது உடலில் அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5.கற்றாழை தண்டுகளை தோல் நீக்கி, மிக்சியில் போட்டு நன்கு அடித்து கற்றாழை ஜுஸ் தயாரித்து, அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும்.

6.சிலருக்கு கோடைகாலங்களில் ஏற்படும் நீர்சுருக்கு அல்லது மூத்திரசுருக்கு போன்ற பிரச்சனைகளும் கற்றாழை மூலம் நீங்கும். மேலும் கற்றாழை உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

7.நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

8. கற்றாழை நச்சுத்தன்மைகளை எதிர்த்து போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது.

9.கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.

10.கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும்.

Tags :