Advertisement

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க... இதோ இருக்கு எளிய வழி!

By: Monisha Tue, 15 Dec 2020 10:39:34 AM

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க... இதோ இருக்கு எளிய வழி!

அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களுக்கு அடுத்தப்படியாக இருப்பது கரும்புள்ளிகள். கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்கள் கடைகளில் இருந்தாலும், அவற்றால் பயன் கிடைக்குமா என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. எனவே இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.

face,beauty,blackhead,potato,lemon ,முகம்,அழகு,கரும்புள்ளி,உருளைக்கிழங்கு,எலுமிச்சை

கரும்புள்ளியை நீக்க ஓட்ஸ் சிறப்பாக உதவுகிறது. ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

Tags :
|
|
|