Advertisement

நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு

By: Nagaraj Wed, 16 Sept 2020 09:07:07 AM

நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு

20 வருடம் முடிந்தது... உலகின் மிகப் பிரபலமான நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி செப்டம்பர் மாதத்தோடு 20 வருடங்கள் ஆகின்றன.

செப்டம்பர் 1, 2000 அன்று நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டது. அடர் நீல நிறத்தில், பச்சை ஒளித் திரையில் இருந்த இந்த மொபைலில் ஸ்னேக் என்கிற விளையாட்டு நம்மவர்களுக்கு மிகவும் பரீட்சையமானது.

எந்த ஒரு போட்டியாளும் இல்லாத நோக்கியாவின் பொற்காலம் அது. 2016-ம் ஆண்டு, ஹெச்.எம்.டி க்ளோபல் என்கிற நிறுவனம், அடுத்த பத்து வருடங்களுக்கு நோக்கியா பிராண்ட் கருவிகளை விற்கும் உரிமத்தைப் பெற்றது.

nokia,20 years,international size,sales ,நோக்கியா, 20 ஆண்டுகள், சர்வதேச அளவு, விற்பனை

மொபைல் தகவல் தொடர்புகளுக்கான உலகளாவிய தொழில்நுட்பத்தை கொண்ட இந்த மொபைல், 133 கிராம் எடை கொண்டது. Monochrome graphic எனப்படும் கருப்பு வெள்ளை டிஸ்ப்ளே கொண்ட, நோக்கியா 3310, நான்கு வீடியோ கேம்களை கொண்டது.

அதாவது, Snake II, Pairs II, Space Impact, Bantumi ஆகிய கேம்கள் இன்றளவும் பயனர்களால் நினைவுகூரப்படுகிறது. 900 mAh battery பவர் கொண்ட இந்த மொபைலில் 2 h 30 min to 4 h 30 வரை பேசலாம். பிரபல தொழில்நுட்ப வல்லுநரான வாலா அஃப்ஸர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நோக்கியா 3310 மிகச் சிறப்பாக விற்பனையானது. கிட்டத்தட்ட 12.6 கோடி மொபைல்கள் சர்வதேச அளவில் விற்பனையாகின.

Tags :
|