Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2.86 லட்சம் பேர் பாதிப்பு

உலக அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2.86 லட்சம் பேர் பாதிப்பு

By: Nagaraj Wed, 30 Sept 2020 12:00:59 PM

உலக அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2.86 லட்சம் பேர் பாதிப்பு

ஒரே நாளில் 2.86 லட்சம் பேர் பாதிப்பு... உலக அளவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் 80 ஆயிரத்து 500 பேருடன் இந்தியா முதலிடத்திலும், 44 ஆயிரம் பேருடன் அமெரிக்காவும், 32 ஆயிரம் பேருடன் பிரேசிலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்துள்ளதால் பெருந்தொற்று காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

therapy,worldwide,india,first,corona ,சிகிச்சை, உலக அளவு, இந்தியா, முதலிடம், கொரோனா

இதில் ஆயிரத்து 178 பேருடன் இந்தியா முதலிடத்திலும், 957 பேருடன் அமெரிக்காவும், அடுத்து பிரேசிலும் உள்ளன. பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

உலக அளவில் 2 கோடியே 51 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 76 லட்சத்து 84 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|
|