Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோ பேக் மோடி விளம்பரத்தை அழிக்க வேண்டும்; பாஜ மாநில துணைத்தலைவர் எச்சரிக்கை

கோ பேக் மோடி விளம்பரத்தை அழிக்க வேண்டும்; பாஜ மாநில துணைத்தலைவர் எச்சரிக்கை

By: Nagaraj Thu, 19 Nov 2020 10:01:20 AM

கோ பேக் மோடி விளம்பரத்தை அழிக்க வேண்டும்; பாஜ மாநில துணைத்தலைவர் எச்சரிக்கை

பாஜ மாநில துணைத்தலைவர் எச்சரிக்கை... 'கோ பேக் மோடி' என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது. மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து நவ.,11ல் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவசாமி சார்பில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நவ.,16ல் அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பகுதியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

dmk,go back modi,wall advertising,bjp warning ,திமுகவினர், கோ பேக் மோடி, சுவர் விளம்பரம், பாஜ எச்சரிக்கை

இதில் மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசிய போது 'கோ பேக் மோடி' என்று எழுதிய விளம்பரங்களை நவ., 24க்குள் தி.மு.க., வினர் அழிக்க வேண்டும். அழிக்கவில்லை என்றால் நாங்கள் சென்று அழிப்போம். அதில் 'ஐந்து கட்சி அமாவாசை' 'சுடலை ராஜா' என்றும் எழுதுவோம்.

பிரதமர் மோடிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என்றால் கரூரில் அரசியல் செய்ய முடியாது. நேர்மையாக அரசியல் செய்ய வாங்க' என்று தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்திபாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுவரை உள்ளூர் அரசியல் பற்றி பேசாமல் இருந்த அண்ணாமலை தி.மு.க. வையும் செந்தில்பாலாஜியை குறி வைத்து பேச தொடங்கியுள்ளார்.

இருப்பினும் இதுவரை 'கோ பேக் மோடி' என்ற சுவர் விளம்பரங்களை தி.மு.க.வினர் அழிக்கவில்லை.அண்ணாமலை கூறியபடி நவ. 25ல் சுவர் விளம்பரங்களை அழிக்க பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர். இந்த எச்சரிக்கையை அடுத்து நேற்று கரூர் நகரில் திமுக சார்பான சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருந்த மோடி எதிர்ப்பு வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|