Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.நா. நடவடிக்கையால் உணவு நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

ஐ.நா. நடவடிக்கையால் உணவு நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

By: Nagaraj Sat, 23 July 2022 11:17:16 PM

ஐ.நா. நடவடிக்கையால் உணவு நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

ஜெனிவா: ஐநாவுடன் ரஷ்யா - உக்ரைன் ஒப்பந்தம் செய்துள்ளதால் உணவு நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன.சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா ஐநா உடன் செய்துள்ள ஒப்பந்தத்திற்குப் பிறகு, உணவு நெருக்கடியிலிருந்து உலகம் விடுபடக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ரஷ்யாவும் உக்ரைனும் தனித்தனி ஒப்பந்தங்களில் சனிக்கிழமை கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் உரங்கள் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

black sea,alert,un,russia,exports,agreement ,கருங்கடல், எச்சரிக்கை, ஐ.நா., ரஷ்யா, ஏற்றுமதி, ஒப்பந்தம்

உலக அளவில் அதிகரித்து வரும் உணவு தானியங்களின் விலையில் சிறிது குறையும், நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் உக்ரைன் அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் ஆகியோர் இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார் ஆகியோருடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

அன்டோனியோ குட்டரெஸ், 'இது மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள ஒரு ஒப்பந்தம் ; உலகிற்கு மிகவும் தேவையான நிவாரணத்தை கொடுக்கும் நம்பிக்கை கதிர்' என்றார். ஐநா சபை மேற்கொண்ட மத்தியஸ்த நடவடிக்கை காரணமாக, இப்போது கருங்கடல் வழியாக தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.


உக்ரைனில் இருந்து வெளியேறும் தானியக் கப்பல்களை நிறுத்தப்போவதில்லை என ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது. கருங்கடல் வழியாக எந்த கப்பலையும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags :
|
|
|