Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்தியர் குறித்து ராமதாஸ் கவலை

தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்தியர் குறித்து ராமதாஸ் கவலை

By: Nagaraj Sat, 15 Oct 2022 10:12:02 PM

தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்தியர் குறித்து ராமதாஸ் கவலை

சென்னை : இந்தியாவை சேர்ந்த 9 பேர் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் சட்டவிரோத கும்பலிடம் இருந்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கைது செய்யப்பட்ட தமிழர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. விசா காலாவதி ஆகிவிட்டதாக அவர்கள் மீதான குற்றச்சாட்டு. குறுகிய கால விசாவில் சென்றவர்கள் சட்டவிரோத கும்பல்களிடம் சிக்கியதால் அவர்களால் விசாரணையை நீட்டிக்க முடியவில்லை.

tags: arrested,imprisoned,kerala,t 8 people from ,சட்டவிரோத, தாய்லாந்து, போராட்டத்துக்குப் பிறகு, மியான்மரில்

கைது செய்யப்பட்ட தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல… அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கப்பட வேண்டும். பணம், உழைப்பு, அமைதி, எதிர்காலம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் அவர்களை ரூ.43,500 அபராதம் கட்ட தாய்லாந்து அரசு வற்புறுத்துவது நியாயமில்லை.

சட்டவிரோத கும்பல்களின் கைகளில் சிக்கிய குடும்பங்களின் துயரத்தை அதிகரிக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரையும் மீட்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|