Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை

கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை

By: Nagaraj Thu, 16 Nov 2023 12:05:00 PM

கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை

சென்னை: 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை... வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கும்.

எனவே பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

இதையடுத்து கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 044-45674567 (20 இணைப்புகள்) கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

மேலும் 15 மண்டலங்களுட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

complaints,impacts,rainfall,drinking water supply,waste water disposal ,புகார் ,பாதிப்புகள் ,மழை,குடிநீர் வழங்கல் ,கழிவு நீர் அகற்றுதல்

Tags :