Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்தாண்டு ஜனவரி வரை பள்ளிகள் மூடப்படும் என்று கென்யா அறிவிப்பு

அடுத்தாண்டு ஜனவரி வரை பள்ளிகள் மூடப்படும் என்று கென்யா அறிவிப்பு

By: Nagaraj Wed, 08 July 2020 6:23:17 PM

அடுத்தாண்டு ஜனவரி வரை பள்ளிகள் மூடப்படும் என்று கென்யா அறிவிப்பு

அடுத்தாண்டு வரை பள்ளிகள் மூடல்... ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பாடசாலைகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் உலகம் முழுவதும் அதிகரித்துவரும் நிலையில் கென்யாவில் கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் இறுதி ஆண்டு பரீட்சைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கடுமையான வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் ஜோர்ஜ் மாகோஹா தெரிவித்துள்ளார்.

Kenya announces that schools will be closed until January next year

public freeze,implemented,schools,next year ,பொது முடக்கம், அமுல்படுத்தப்பட்டுள்ளது, பள்ளிகள், அடுத்தாண்டு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 164 இறப்புகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதுடன் மேலும் புதிய தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, நைரோபி மற்றும் மொம்பசாவின் முக்கிய நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட, ஒரு கட்டமாக நாட்டை மீண்டும் திறப்பதாக அறிவித்தார். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு இரவு நேரத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :