Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும்; தொடர் மழையால் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை

குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும்; தொடர் மழையால் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை

By: Nagaraj Mon, 03 Aug 2020 11:58:04 AM

குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும்; தொடர் மழையால் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை

மேட்டூர் அணையில் இருந்து, திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மழை கைக் கொடுப்பதால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த, 2011க்கு பிறகு கடந்த ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் துவக்கினர்.

ஆனால் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த ஜூலை மாதம், தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் வரவில்லை. இதனால், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்ட தண்ணீர், 3,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

farmers,rain,curry cultivation,crossing the target,anticipation ,விவசாயிகள், மழை, குறுவை சாகுபடி, இலக்கை தாண்டும், எதிர்பார்ப்பு

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மழை பெய்ததால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பிரச்னை வர வாய்ப்பில்லை என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் நெல் சாகுபடி இலக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர் .இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

டெல்டா பகுதியில், தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 8,000 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 3,000 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில், 83 ஆயிரம் ஏக்கர் என, இரண்டு லட்சத்து, 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த இலக்கை மிஞ்சி, தஞ்சாவூரில் ஒரு லட்சத்து, 9,000 ஏக்கர், நாகப்பட்டினத்தில், ஒரு லட்சத்து, 6,000 ஏக்கர், திருவாரூரில், 85 ஆயிரம் ஏக்கர் என, மூன்று லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர, திருச்சி, கரூர் மாவட்டங்களிலும், நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விட, கூடுதலாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால், குறுவை சாகுபடி இலக்கு, நான்கு லட்சத்தை தாண்ட வாய்ப்புள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால், குறுவை சாகுபடி கேள்வி குறியாக இருந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜூலை மாதம், பரவலாக மழை பெய்தது.

இதனால், குறுவை சாகுபடி செழிக்கும் வாய்ப்புள்ளது. குறுவை சாகுபடி அறுவடை வரும் செப்டம்பர், இரண்டாவது வாரத்தில் துவங்கும். எனவே, செப்டம்பர் முதல் வாரம் வரை தண்ணீர் தேவை. மழையும் தீவிரமடைந்து வருவதால், டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி இலக்கை மிஞ்சும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
|