Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 11 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 11 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Sat, 01 Aug 2020 12:52:06 PM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 11 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் 1 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 59 லட்சத்து 13 ஆயிரத்து 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

world,corona virus,corona death,corona prevalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 885 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 58 ஆயிரத்து 280 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 23,27,572 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|