Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 14 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 14 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Mon, 03 Aug 2020 12:02:03 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 14 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona infection,world,corona virus,corona recovery ,கொரோனா தொற்று, உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மீட்பு

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்குதலுக்கு 6 லட்சத்து 92 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பிலிருந்து இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பு, கொரோனா உயிரிழப்பு, கொரோனாவில் இருந்து குணம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 23,80,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் குணம் அடைந்த நாடுகளில் பிரேசில், இந்தியா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|