Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 16 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 16 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Tue, 04 Aug 2020 12:04:27 PM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 16 லட்சம் பேர் குணம்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. கொரோனா பாதிப்புடைய 60 லட்சத்து 72 ஆயிரத்து 489 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,world,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 1 கோடியே 16 லட்சத்து 64 ஆயிரத்து 722 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 24,45,854 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|