Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 1 கோடியே 56 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 1 கோடியே 56 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Sat, 22 Aug 2020 1:57:25 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 1 கோடியே 56 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

corona infection,world,corona virus,corona death ,கொரோனா தொற்று, உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனாவிலிருந்து பலர் குணமடைந்து வருகின்றனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்புடைய 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 818 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|