Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 58 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 58 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Sun, 23 Aug 2020 4:41:29 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 58 லட்சம் பேர் குணம்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது இந்த வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்து 59 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

corona virus,world,corona infection,corona death ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா தொற்று, கொரோனா மரணம்

கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் பலர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்புடைய 66 லட்சத்து 62 ஆயிரத்து 226 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 7 ஆயிரத்து 689பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரத்து 775 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

Tags :
|