Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால்தடம் கண்டுபிடிப்பு

சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால்தடம் கண்டுபிடிப்பு

By: Karunakaran Fri, 18 Sept 2020 1:07:44 PM

சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால்தடம் கண்டுபிடிப்பு

சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்கால ஏரியில் மனித மற்றும் விலங்குகளின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவில் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புறநகர் பகுதியில் உள்ள இந்த வறண்ட ஏரியைச் சுற்றிலும் மனிதர்கள், யானைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்குகளின் கால்தடங்கள் கிடைத்துள்ளன. இதுவரை சுமார் 233 யானைகளின் புதைபடிவங்கள், 7 மனிதர்கள், 107 ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளின் தடயங்களை அகழ்வாராய்ச்சி குழு கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

old footprint,saudi arabia,fossils,biodiversity ,பழைய தடம், சவுதி அரேபியா, புதைபடிவங்கள், பல்லுயிர்

இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு சவுதி அரேபியாவில் மனித வாழ்வின் மிக பழமையான இருப்பு பற்றிய முதல் அறிவியல் சான்றுகளை குறிப்பதாகவும், அத்துடன் பிராந்தியத்தில் இயற்கை சூழல் மற்றும் பல்லுயிர் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்குவதாகவும் சவுதி அரேபிய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேலும் அகழ்வாராய்ச்சி குழு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

Tags :