Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பண்டிகை .... அரசு பேருந்துகளில் சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கல் பண்டிகை .... அரசு பேருந்துகளில் சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் முன்பதிவு

By: vaithegi Tue, 10 Jan 2023 7:26:02 PM

பொங்கல் பண்டிகை     ....   அரசு பேருந்துகளில் சென்னையில் மட்டும் 1 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வரவுள்ளது. இதையடுத்து இவ்விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுமார் 600 பேருந்துகளுக்கு மேல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு விரைவு பேருந்துகளில் விடுமுறை நாட்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று கொண்டு வருகிறது.

booking,chennai,pongal festival,government buses ,முன்பதிவு,சென்னை,பொங்கல் பண்டிகை   ,அரசு பேருந்துகள்

தற்போது திருநெல்வேலி, கோவை, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, பெங்களூர், திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல கூடிய பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பி விட்டது.

நாளை பயணம் செய்ய இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து மட்டுமே 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு வெளியூர் செல்வோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நாளை முதல் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags :