Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 39 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 39 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Fri, 14 Aug 2020 1:40:11 PM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 39 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

world,corona recover,corona virus,corona prevalence ,உலகம், கொரோனா மீட்பு, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 39 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 1 கோடியே 39 லட்சத்து 451 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|