Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை 10 நாட்களா?

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை 10 நாட்களா?

By: vaithegi Wed, 22 Nov 2023 12:53:38 PM

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை  10 நாட்களா?


சென்னை: தமிழக பள்ளிகளில் தற்போது 2-ம் பருவம் நடந்து வருகிறது. 2-ம் பருவத்திற்கான தேர்வுகள் வருகிற டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையானது அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படவுள்ளதாகவும், அரசின் அட்டவணைப்படியே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

half year exam holiday,school students ,அரையாண்டு தேர்வு விடுமுறை  ,பள்ளி மாணவர்கள்

6 முதல் 10ம் வகுப்புகளுக்கு வருகிற டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரையிலும், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வருகிற டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

இதையடுத்து தேர்வுகள் முடிந்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஜனவரி 2ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே அதன்படி 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களும், 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன.

Tags :