Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகள் 10 பேர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகள் 10 பேர் பலி

By: Monisha Sat, 27 June 2020 1:38:10 PM

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகள் 10 பேர் பலி

சிரியாவில் ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.

சிரியாவின் மத்தியப் பகுதியில் பல்மைரா மற்றும் அஸ் சுஹ்னா பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். ஈரான் ஆதரவுத் தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இரு தினங்களுக்கு முன்னர்தான் சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு மாதங்களில் சிரியாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.

syria,air strikes,iran,militants,killed ,சிரியா,வான்வழித் தாக்குதல்,ஈரான்,தீவிரவாதிகள்,பலி

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டை நடந்துவருகிறது. இந்த சண்டை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. இதன் காரணமாக ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசுப் படைகள் மீட்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் அவ்வப்போது இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகிறது.

சிரியாவில் 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர்.

Tags :
|
|