Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம்

By: Nagaraj Sat, 25 Feb 2023 10:46:28 PM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தது. 5 கிலோ குறைந்துள்ளது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

ஆனால் பாஜக தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. நெருக்கடி காலத்தில் மக்களுக்கு அன்ன பாக்யா திட்டம் மற்றும் நரேகா திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

anna pakya,congress,karnataka, ,அன்ன பாக்யா, கர்நாடகா, காங்கிரஸ்

இந்த திட்டத்தை காங்கிரசின் 3வது உறுதிமொழியாக அறிவிக்கிறோம். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும். எங்கள் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஒவ்வொரு வீட்டுக்கும் வாரண்டி கார்டு வழங்கவும் முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் யாரும் பட்டினி கிடக்கக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். இது சித்தராமையாவின் திட்டம் அல்ல மோடியின் திட்டம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகிறார்.

ஒருவேளை இதுதான் மோடியின் திட்டம் என்றால் குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் இலவச அரிசி திட்டம் ஏன் அமலில் இல்லை என்பதை விளக்க வேண்டும். பிரதமர் மோடி உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தாரா? பசவராஜ் பொம்மைக்கு பொய் சொல்லும் பழக்கம் உண்டு. இந்த காரணத்திற்காகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவரை முதல்-அமைச்சராக நியமித்துள்ளது என்றார்.

Tags :