Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தாலியில் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது .. முதல்நாளில் 10 பேருக்கு தடுப்பூசி

இத்தாலியில் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது .. முதல்நாளில் 10 பேருக்கு தடுப்பூசி

By: vaithegi Wed, 10 Aug 2022 07:05:27 AM

இத்தாலியில் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது ..  முதல்நாளில் 10 பேருக்கு தடுப்பூசி

இத்தாலி: உலகமெங்கும் குரங்கு அம்மை மிக வேகமாக பரவி வருகிற நிலையில், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. சில நாடுகள், இந்த தொற்று நோயை தடுக்க தடுப்பூசி போடுவதில் மிக கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன.

எனவே அந்த வகையில் குரங்கு அம்மைக்கு எதிராக இத்தாலியில் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் 10 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

vaccination,monkey measles ,தடுப்பூசி , குரங்கு அம்மை

மேலும் இதுகுறித்து ரோம் நகரின் தொற்று நோய் ஆஸ்பத்திரியான ஸ்பாலன்ஜானி ஆஸ்பத்திரி கூறுகையில்,

"பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட 2 டோஸ் கொண்ட ஜின்னியோஸ் தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராகவும், மிக வலுவாகவும் செயல்படுகிறது. ஏனென்றால், பெரியம்மை வைரசும், குரங்கு அம்மை வைரசும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை" என்று தகவல் தெரிவித்தது.

Tags :