Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய்.. புரியவில்லையா வாருங்கள்.. படிக்கலாம் என்வென்று!!

காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய்.. புரியவில்லையா வாருங்கள்.. படிக்கலாம் என்வென்று!!

By: Monisha Thu, 23 June 2022 8:32:12 PM

காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய்.. புரியவில்லையா வாருங்கள்.. படிக்கலாம் என்வென்று!!

தமிழ்நாடு: நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இந்த மலையில் மிளகு,காபி போன்ற சிறுதானிய வகைகள் இருக்கின்றன..இதோட பல அருவிகளும், சுற்றுலா தளங்களும்,மூலிகைகளும் உள்ளன. இங்க உள்ள மது கடைகளில் மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்க நடக்கும் பாதைகளில் வீசி செல்கிறார்கள. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் என்ன முடிவெடுத்தாலும் அது பயன் இல்லை.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் மதுபான பாட்டில்களை பயன்படுத்தி விட்டு அதை சாலை ஓரங்களில், விளை நிலங்களில், வனபகுதி மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் போடுகிறார்கள்.

இதை தடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்க் வெளி இட்டுள்ள தகவல்.. அதாவது மதுபான கடைகளில் விற்பனை செய்யபடும் மதுபான பாட்டில்களுக்கு வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுப் பானங்களை வாங்க வேண்டும்.

bottle,government rules,return,10 rupees ,பாட்டில், தடுத்தல், 10 ரூபாய், அரசு,

பின்னர் காலி மதுபான பாட்டில்களை வாங்கிய மதுபான கடைகளில் திரும்ப ஒப்படைத்து,10 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறை கொல்லிமலை வட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும் என குறிப்பட்டுயுள்ளது. இதனால் தூய்மையை காக்க முடியும்.

Tags :
|
|