Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் அதிகரிப்பு

சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் அதிகரிப்பு

By: vaithegi Wed, 12 July 2023 11:06:13 AM

சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து வர வேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்த வகையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மொத்த விற்பனையில் தக்காளி கிலோவிற்கு 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 140 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.

tomato,koyambedu market,chennai ,தக்காளி ,சென்னை கோயம்பேடு சந்தை

இதனையடுத்து நேற்றைய தினம் கோயம்பேடு மொத்த சந்தையில் 1 கிலோ தக்காளி விலை ₹100-க்கு விற்பனையாகிறது. அதைத்தொடர்ந்து சில்லறை விற்பனையில் 10 ரூபாய் குறைந்து விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் அதிகரித்து ரூ.130க்கு விற்பனை ஆகிறது. இதேபோன்று பச்சை மிளகாய் 10 ரூபாய் குறைந்து 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து , 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tags :
|