Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை ஆய்வு செய்ய 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை ஆய்வு செய்ய 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

By: Monisha Fri, 20 Nov 2020 09:46:37 AM

வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை ஆய்வு செய்ய 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளராக நியமனம் செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 1.1.2021 தேதியை தகுதியாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்கும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளராக நியமனம் செய்துள்ளது. பார்வையாளர்கள் சுருக்க முறை திருத்த பணிகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது 3 முறையாவது பயணம் செய்து பார்வையிட வேண்டும்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களின் பெயர், பதவி, ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்கள் விவரம் வருமாறு:-

voter list,complaints,ias officials,election commission of india ,வாக்காளர் பட்டியல்,புகார்கள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்,இந்திய தேர்தல் ஆணையம்

1. டாக்டர் அதுல் ஆனந்த் (ஆணையர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை)- சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு 2. கிர்லோஷ்குமார் (மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்)- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 3. ஷிஜிதாமஸ் வைத்யன் (மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு முதலீட்டு கழகம்)-மதுரை, தேனி, விருதுநகர் 4. சண்முகம் (ஆணையர், அருங்காட்சியகம்) -நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் 5.ஜோதிநிர்மலாசாமி (மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்)- கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி.

6.வள்ளலார் (ஆணையர், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை)- தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை 7.சிவசண்முகராஜா(மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்)-நாமக்கல், கரூர், திண்டுக்கல் 8.ஆபிரகாம் (சமூக நல ஆணையர்)- ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை 9. கருணாகரன் (இயக்குனர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை)-கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, 10. சஜ்ஜன்சிங் ரா.சவன் (ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை)- அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :