Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்... ராகுல் உறுதி

நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்... ராகுல் உறுதி

By: Nagaraj Mon, 30 Oct 2023 4:40:21 PM

நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்... ராகுல் உறுதி

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் உறுதி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக சத்தீஸ்கர் வந்துள்ளார். முன்னதாக, ராய்ப்பூர் அருகே உள்ள கைதியா கிராமத்திற்குச் சென்ற ராகுல், அங்குள்ள வயல்களில் பணிபுரியும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

chhattisgarh,congress,free medical, ,இலவச மருத்துவம், காங்கிரஸ், ரூ.10 லட்சம்

அப்போது பேசிய அவர், “சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் நிலமற்ற விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.7000 ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அதானிக்கு கொடுக்கும் அதே தொகை தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். சத்தீஸ்கரில் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள். டாக்டர் குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

அதேபோல், தற்போது வழங்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சை தொகையான ரூ.50,000 மற்ற பிரிவினருக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் சத்தீஸ்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்” என்றார்.

Tags :