Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடைக்கானலில் உணவுக்கூடங்களில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

கொடைக்கானலில் உணவுக்கூடங்களில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

By: Nagaraj Fri, 20 Oct 2023 2:39:11 PM

கொடைக்கானலில் உணவுக்கூடங்களில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் உணவுக்கூடங்களில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவுக்கூடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டன.

municipal officers,inspection,moonchikal,lake road,lascott road ,நகராட்சி அதிகாரிகள், ஆய்வு, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை

மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவுக்கூடங்களில் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இறைச்சி, சப்பாத்தி மாவு, நூடுல்ஸ், மசாலா பொருள்கள், காபி, டீ தூள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கெட்டுப்போய், காலாவதியான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.

Tags :