Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கா அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வரவு

அமெரிக்கா அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வரவு

By: Karunakaran Sun, 14 June 2020 10:37:48 AM

அமெரிக்கா அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வரவு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டிவிட்டது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன.

india,america,ventilator,coronavirus,trump ,வெண்டிலேட்டர்,கொரோனா, இந்தியா,அமெரிக்கா,டிரம்ப்

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம். மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்கா நன்கொடையாக அளிக்கவுள்ள இந்த வெண்டிலேட்டர்கள் வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வந்தடையவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து 10 வெண்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் 15-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் அவை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|