Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெங்கு காய்ச்சல் தீவிரம் .. மாநிலம் முழுவதும் அக்.1 ஆம் தேதி 1000 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடல்

டெங்கு காய்ச்சல் தீவிரம் .. மாநிலம் முழுவதும் அக்.1 ஆம் தேதி 1000 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடல்

By: vaithegi Tue, 26 Sept 2023 3:22:22 PM

டெங்கு காய்ச்சல் தீவிரம்   ..  மாநிலம் முழுவதும் அக்.1 ஆம் தேதி 1000 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடல்


சென்னை: டெங்குவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை ... தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருவதால் டெங்கு கொசுக்களின் உற்பத்தியும் அதிகமாகி நாளுக்கு நாள் டெங்கு தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் மட்டுமே புதிதாக 36 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி சுகாதாரத் துறை தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டு வருகிறது.

அந்த வகையில், வருகிற அக்டோபர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களின் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

medical camp,dengue fever ,மருத்துவ முகாம்,டெங்கு காய்ச்சல்


மேலும், இந்த முகாமின் மூலமாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, கட்டாயமாக பொதுமக்கள் உங்கள் ஊரில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவ முகாமிற்கு சென்று சிறு காய்ச்சல், தலைவலி என்றாலும் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இது போன்ற மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டாலும் பொதுமக்கள் தங்களது வீட்டை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ளும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :