Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்டோபர் 1 முதல் PUC சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

அக்டோபர் 1 முதல் PUC சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

By: vaithegi Sat, 24 Sept 2022 7:01:23 PM

அக்டோபர் 1 முதல் PUC  சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு

டெல்லி: PUC சான்றிதழ் இல்லையெனில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு ... டெல்லியில் அக்டோபர் 1 முதல் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

டெல்லியில் காற்று மாசுபாடு உயர்ந்து வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு வலியுறுத்தி வருகிறது.

vehicle,puc certificate,fine ,வாகனம் ,PUC  சான்றிதழ்,அபராதம்


மேலும், வாகனங்களை பயன்படுத்துவோர் PUC எனும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை பெற வேண்டும். தங்கள் வண்டியில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற காற்றை மாசுபடுத்தக்கூடிய வகையில் ஏதேனும் வாயு வருகிறதா என்பதை பராமரித்து அதற்கான சான்றிதழ் பெறுவது தான் PUC சான்று.

இதனை அடுத்து இந்த சான்று தற்போது டெல்லியில் காட்டாயமாகியுள்ளது. இதை பெறாமலோ, புதுப்பிக்காமலோ வாகனம் ஓட்டினால் அக்டோபர் 1 முதல் அதற்கான அபராத தொகை 10 ஆயிரமாக நிர்ணனையிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது வாதங்களுக்கு நீண்ட காலமாக மாசு சான்றிதழை புதுப்பிக்காமல் இருக்கும் 15,000 நபர்களுக்கு புதுப்பிக்க டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags :