Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு

சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு

By: Monisha Tue, 30 June 2020 12:07:54 PM

சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

tamil nadu,madras,restricted area,curfew,coronavirus ,தமிழ்நாடு,சென்னை,கட்டுப்படுத்தப்பட்ட பகுதி,ஊரடங்கு,கொரோனா வைரஸ்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இதையடுத்து சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினத்தில் 46, திருப்பத்தூரில் 45, திருவள்ளூரில் 38 இடங்கள், செங்கல்பட்டு 16, கோவையில் 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் ஒன்று என கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

கிருஷ்ணகிரி 5, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 10, ராணிப்பேட்டையில் 18, சிவகங்கை 6, தென்காசி 2, தஞ்சாவூர் 19, தேனியில் 4, திருவாரூர் 2, தூத்துக்குடி 4, நெல்லையில் 5, திருப்பூர் 26 இடங்கள் என மொத்தம்29 மாவட்டங்களில் 703 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை.

Tags :
|
|