Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனியில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு; வருகிற 31-ந்தேதி வரை வங்கிகள் மூடல்

தேனியில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு; வருகிற 31-ந்தேதி வரை வங்கிகள் மூடல்

By: Monisha Fri, 17 July 2020 4:02:38 PM

தேனியில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு; வருகிற 31-ந்தேதி வரை வங்கிகள் மூடல்

தேனியில் ஏற்கனவே 2,053 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 82 ஆயிரத்து 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

theni district,corona virus,infection,treatment,deaths ,தேனி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் தேனியில் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 2,053 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,160 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 827 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வங்கிகளையும் மூட நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நகரில் உள்ள அனைத்து வங்கிகளும் நேற்று முன்தினம் மூடப்பட்டன. தொடர்ந்து வருகிற 31-ந்தேதி வரை வங்கிகள் மூடப்படுகின்றன. அரசு தொடர்பான பணப் பரிவர்த்தனைக்கு மட்டும் காலை 10 மணி முதல் 11 மணி வரை மட்டும் ஒரு மணி நேரத்துக்கு வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

Tags :