Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்; முதலமைச்சர் தகவல்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்; முதலமைச்சர் தகவல்

By: Monisha Fri, 07 Aug 2020 3:57:35 PM

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்; முதலமைச்சர் தகவல்

கொரோனா தடுப்பு பணியிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதன் பின்னர் வீட்டுமனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ambulance,corona prevention work,edappadi palanisamy,welfare assistance ,ஆம்புலன்ஸ்,கொரோனா தடுப்பு பணி,எடப்பாடி பழனிசாமி,நலத்திட்ட உதவிகள்

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

* தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

* தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்.

* கொரோனா தடுப்பு பணியிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

* அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

* 1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன.

* 14 நிறுவனங்கள் தங்கள் தொழிலை துவங்கி உள்ளன.

* நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :