Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ட்விட்டரில் 12 மாதங்களுக்கு பின் உள்ளடக்க சந்தாக்களில் 10% குறைப்பு

ட்விட்டரில் 12 மாதங்களுக்கு பின் உள்ளடக்க சந்தாக்களில் 10% குறைப்பு

By: vaithegi Sat, 29 Apr 2023 2:49:02 PM

ட்விட்டரில் 12 மாதங்களுக்கு பின் உள்ளடக்க சந்தாக்களில் 10% குறைப்பு

இந்தியா: மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான ட்விட்டரில் 12 மாதங்களுக்கு பின் உள்ளடக்க சந்தாக்களில் 10% குறைக்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு ... உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான எலான் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை செய்து கொண்டு வருகிறார்.

மேலும் புளு டிக் இருக்கும் கணக்குகள் மாத சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் புளு டிக் நீக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பெரும் சர்ச்சையை கிளப்பியது.

subscribe,twitter ,சந்தா,ட்விட்டர்

அந்த வகையில் தற்போது தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பின் படி முதல் வருடத்திற்குப் பிறகு உள்ளடக்க சந்தாக்களில் 10% குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் முதல் 12 மாதங்களுக்கு உள்ளடக்க சந்தாக்களில் நிறுவனம் எந்தக் குறைப்பை கொடுக்காது என தெரிவித்த அவர் கடந்தாண்டு அக்டோபரில் முடிவடைந்த $44 பில்லியன் கையகப்படுத்துதலுக்குப் பிறகு ஏற்பட்ட விளம்பர வருமானம் வீழ்ச்சி காரணமாக, நிறுவனத்தின் வருவாயை உயர்த்த இந்த மாற்றங்களை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :