Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி வெளியீடு

10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி வெளியீடு

By: vaithegi Tue, 16 May 2023 09:48:25 AM

10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி வெளியீடு

சென்னை : தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 08-ம் தேதி வெளியாகின. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்தாண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

public examination,students,examination ,பொதுத்தேர்வு ,மாணவிகள் ,தேர்ச்சி

அதேபோன்று தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் 10-ம் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதன்படி வருகின்ற 19-ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :