Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 10ம் , 12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10ம் , 12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

By: vaithegi Wed, 22 June 2022 1:19:20 PM

தமிழகத்தில் 10ம் , 12ம் வகுப்பு மாணவர்கள்  மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கி மே 30 ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை ஜூன் 1 ம் தேதி தொடங்கி ஜூன் 9ம் தேதி வரை ஆசிரியர்கள் திருத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு முடிவுகளை கடந்த ஜூன் 20ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுருந்தார். இந்த தேர்வில் 12ம் வகுப்பில் சுமார் 93.76 சதவீத மாணவ,மாணவிகள் , 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன.

மேலும், இந்த பொது தேர்வில் 30,000 க்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனால் தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் துணை தேர்வுகள் மூலம் எழுதலாம் என கூறியுள்ளது.

schools,school education,private schools,reunion ,பள்ளிகள் ,பள்ளிக் கல்வித்துறை ,தனியார் பள்ளிகள்,மறுகூட்டல்

அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்கள் மதிப்பெண்களின் ஏதெனும் குறைபாடுகள் இருந்ததால் விடைத்தாள்‌ நகல்‌ அல்லது மறுகூட்டலுக்கு இன்று முதல் ஜூன் 29 வரை தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மறுகூட்டல்‌ கட்டணம்‌ ஒவ்வொரு பாடத்திற்கும்‌ ரூ.205 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு விண்ணப்பிப்பவர்கள் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags :