Advertisement

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sat, 30 July 2022 1:41:00 PM

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் : தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கியது முதல் பல கோவில்களில் திருவிழாக்கள் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஆடிமாத திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நாள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

local holiday,salem ,உள்ளூர் விடுமுறை,சேலம்

மேலும் அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் அரசு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு தேர்வுகளுக்கு விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 3 ஆம் தேதி (சனிக்கிழமை ) முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

Tags :