Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு ..விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25ம் தேதி தொடக்கம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு ..விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25ம் தேதி தொடக்கம்

By: vaithegi Thu, 20 Apr 2023 10:38:27 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு  ..விடைத்தாள் திருத்தும் பணி  வருகிற 25ம் தேதி தொடக்கம்

சென்னை: நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோன்று , மார்ச் 14-ல் தொடங்கிய 11ம் வகுப்பு பொதுத் தேர்வும் ஏப்.5ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதனையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

answer sheet,general exam ,விடைத்தாள் ,பொதுத்தேர்வு



இதனை அடுத்து இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் ஆகியோர் அடங்குவர். சுமார் 55,000 ஆசிரியர்கள் பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாகவே நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25-ம் தேதி தொடங்குகிறது.

மே 3ம் தேதி வரை இந்தப்பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 2-வது அல்லது 3-வது வாரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :