Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

By: vaithegi Thu, 06 Apr 2023 10:53:14 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி கடந்த திங்கள் கிழமை நிறைவடைந்தது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிளஸ் 1 தேர்வு நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

இதையடுத்து இத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் எழுதுகிறார்கள். இன்று தொடங்கி வருகிற 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேர் எழுதுகின்றனர்.

public examination,10th class,puducherry,tamil nadu ,பொதுத்தேர்வு ,பத்தாம் வகுப்பு,தமிழகம் ,புதுச்சேரி



இதேபோன்று புதுச்சேரியிலிருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர். மேலும் இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர்.

மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags :